இது எனது பதிவின் முதல் கவிதை முயற்சி..!
இந்தப்பதிவு அனைவரையும் போல நான் எனது எண்ணங்களின் உணர்ச்சி கொப்பளிப்புகளை தாங்கும் ஒரு பாத்திரமாகவே கருதி தொடங்கினேன். கவிதை முயற்சி பெரும்பாலானவர்களை போல எனது பள்ளி பருவத்திலிருந்தே தொடங்கியது தான். காலவோட்டத்தில், நானும், எனது முக்கியத்துவங்களும் சூழ்நிலைகளையும், தேவைகளையும் கருத்தில் கொண்டு நகர தொடங்கிய பின்னர், அது போன இடம் கூட தெரியவில்லை. சில ஆண்டுகள் கழித்து முயற்சித்த போது என்னால் அந்த பழைய பள்ளிக்கால அனுபவத்தை தொட கூட முடிய வில்லை என்றொரு உணர்வு. இன்றும் அப்படித்தான் நினைக்கிறேன்.
கவிதையை ரசிப்பதென்பது ஒரு தனி அனுபவமே...! ஒரே தளத்தில், ஒரே திசையில், ஒரே வேகத்தில் பயணம் செய்யும் போது மட்டும் தான் சிறிதளவேனும் கவிதைகள் நமக்கு புரிதலை கொடுக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. புரிதல் என்பதை விட உணர்தல் என்பது சரியாக பொருந்தும் என்றே கருதுகிறேன். அந்த ஒரே எண்ணத்தின் வடிவாய் இப்போது மறுபடியும் ஒரு முயற்சி...!
இந்த முயற்சிக்கு தூண்டுதல் நானே..! ஆனால் இது இவ்வளவு விரைவில் வெளியிட மறைமுக தூண்டுதல் எனக்கிருக்கும் மிக, மிக சிறிய, 'துக்ளியூண்டு' பதிவுலக நண்பர்களுள் ஒருவரான 'ஆனந்தி'. அவருக்கு நன்றி பகர்தலுடன் உங்களை அழைத்துச் செல்கிறேன் கீழே கவிதை வரிகளின் அருகே...
எழுதிவிட்டேன்.. அவஸ்த்தையா இல்லை அனுபவமா என்பதை உங்கள் மனதின் எதிரொலியாய் வந்து விழும் விரல் வடிக்கும் எழுத்துக்களில் கண்டு கொள்வேன்...
கணங்களாய்....!
எடுக்கின்றன கோடி பிறவிகள்...
என் கணங்கள் எனக்காகவே...!
துளிர்க்கின்ற எண்ணங்களை
பரிவுடன் தாங்கி...!
எண்ணத்தின் அரிதாரங்கள் தான்...
எத்தனை...எத்தனை...!
புதைந்து அழுகி, பின் முளைவுற்று,
வெடித்து விலகி, பின் கருவுற்று,
மறித்து கருகி, பின் உருவுற்று,
துறந்து நீங்கி, பின் உயிருற்று,
வெறுத்து வதங்கி, பின் மலர்வுற்று,
வலிந்து குழம்பி, பின் தெளிவுற்று,
களைத்து வாடி, பின் செறிவுற்று,
கரைந்து உருகி, பின் மெருகுற்று,
ஓய்ந்து அடங்கி, பின் கிளர்வுற்று,
தனித்து ஒதுங்கி, பின் களமுற்று,
எண்ணத்தின் அவதாரங்கள் தான்...
எத்தனை..எத்தனை...!
துளிர்க்கின்றன எண்ணங்கள்...
கணங்கள் ஊமைகளாகுமோ சொல்லுங்கள்...!
எங்கே தொலைந்து போனாய்..
எனக் கேட்கும் சமூகமே...!
இதோ கேட்டுச்செல்,
என் சொற்களை..!
எங்கும் தொலைந்து போய் விடவில்லை...!
எதிலும் உறைந்து போய் விடவுமில்லை...!
மறைந்து உதிக்கிறேன்..
நான்...
ஒவ்வொரு துளிர்ப்பிலும்...!
காலத்தின் துடிப்பாகிய...
கணங்களாய்...!
--விளையாடும் வெண்ணிலா....
14 கருத்துகள்:
சரளமான எழுத்துக்கு பாராட்டுக்கள்
Nice!
புத்தாண்டு வாழ்த்துக்களை!:-)
கவிதை முயற்சி நன்று.... இன்னும் நிறைய எழுதுங்கள்...
//பார்வையாளன் சொன்னது…
சரளமான எழுத்துக்கு பாராட்டுக்கள்//
நன்றி பார்வையாளன்...!
//ஜீ... சொன்னது…
Nice!
புத்தாண்டு வாழ்த்துக்களை!:-)//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...!
உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!
//philosophy prabhakaran சொன்னது…
கவிதை முயற்சி நன்று.... இன்னும் நிறைய எழுதுங்கள்...//
மிக்க நன்றி நண்பரே..!
//புதைந்து அழுகி, பின் முளைவுற்று,
வெடித்து விலகி, பின் கருவுற்று,
மறித்து கருகி, பின் உருவுற்று,
துறந்து சாகி, பின் உயிருற்று,
வெறுத்து வதங்கி, பின் மலர்வுற்று,
வலிந்து குழம்பி, பின் தெளிவுற்று,
களைத்து வாடி, பின் செறிவுற்று,
கரைந்து உருகி, பின் மெருகுற்று,
ஓய்ந்து அடங்கி, பின் கிளர்வுற்று,
தனித்து ஒதுங்கி, பின் களமுற்று,//
இதோடா..ம்ம்...பட்டய கிளப்புற மாதிரி இருக்கே சகோ....
//துறந்து சாகி, பின் உயிருற்று,//
அதென்ன சாகி???செத்துனே போடுங்க சகோ:))) உங்க அளவுக்கு எனக்கு இலக்கியம் தெரியாது:))))
//ஆனந்தி.. சொன்னது…
இதோடா..ம்ம்...பட்டய கிளப்புற மாதிரி இருக்கே சகோ....//
வாங்க...! வாங்க...!
என்னடா நம்ம தூண்டி விட்டவங்கள இன்னும் காணோமேன்னு பாத்தேன்...!
அதுவா அப்படிதான் சில நேரம் நம்மள மீறி அருவி மாறி கொட்டும்...!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆனந்தி...!
//ஆனந்தி.. சொன்னது…
அதென்ன சாகி???செத்துனே போடுங்க சகோ:))) உங்க அளவுக்கு எனக்கு இலக்கியம் தெரியாது:))))//
மன்னிக்கனும்...!
அந்த வார்த்தைய போடும் போதே கொஞ்சம் உதறலா தான் இருந்தது...!
சரியா வருமான்னு...!
ஆனா கரக்டா பிடிச்சிட்டீங்களே ஆனந்தி...!
ம்ம்ம்...! வேற வார்த்தையால ரீப்ளேஸ் பண்ண முயற்சி செய்றேன்...!
அப்புறம் அந்த "குத்தல்" கமன்ட் ரொம்ப நல்லா இருந்தது...!
//துறந்து நீங்கி, பின் உயிருற்று,//
இது ஓகே...சகோ..:)))
மிக்க நன்றி ஆனந்தி...!
அப்புறம் ஒரு விஷயம்...
நாம ஸ்கேன் செய்யபடுகிறோம்,
நாம சிலரால் மானிட்டர் செய்யப்படுகிறோம்
என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு..!
//நாம ஸ்கேன் செய்யபடுகிறோம்,
நாம சிலரால் மானிட்டர் செய்யப்படுகிறோம்
..!//
yes..that iz "microscopical view" :)))))
//ஆனந்தி.. சொன்னது…
yes..that iz "microscopical view" :)))))
3 ஜனவரி, 2011 3:08 am
அப்படியென்றால் நான் நுண்னோக்கப் படுகின்றேன்...! I'm microscopically viewed...! நன்றி ஆனந்தி...!
கருத்துரையிடுக