வெள்ளி, 31 டிசம்பர், 2010

வாராய் நீ வாராய்...!
ருசி மறவா நாவினாய்...
துடி துறவா இதயமாய்...

இமை விலகா துயில்களாய்...
அணை விலகா காதலியாய்...

மருந்தில்லா மணித்துளிகளாய்...
வருந்திலா வருடல்களாய்...

கரைகளறுக்கும் வெள்ளமாய்...
கங்குகளுருக்கும் எண்ணமாய்...

துயர் துரத்தும் இன்பமாய்...
தமிழ் குன்றா நினைவுமாய்...

நான் என் கதவு திறக்க காத்திருக்கும் பதுமையே...!
வாராய் நீ வாராய்...!

கறைகள் களைந்து... 
களிக்கச்செய்து போவாய் என் கணங்களை...!
வாராய் நீ வாராய்...!

வருக வருக 2011...!
நன்றி நன்றி 2010...!


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!
என்றும் அன்புடனும் பாசத்துடனும்...
--விளையாடும் வெண்ணிலா....

2 கருத்துகள்:

ஆனந்தி.. சொன்னது…

சகோ!புத்தாண்டு வாழ்த்துக்கள்...மீண்டும் ஜோஷ் இல் பதிவு போடுவதுக்கும் வாழ்த்துக்கள்..:))

Sathish Kumar சொன்னது…

//ஆனந்தி.. சொன்னது…
சகோ!புத்தாண்டு வாழ்த்துக்கள்...மீண்டும் ஜோஷ் இல் பதிவு போடுவதுக்கும் வாழ்த்துக்கள்..:))//


வருகைக்கும் வாழ்த்துக்கும் பல கோடி நன்றிகள், ஆனந்தி...!

கருத்துரையிடுக