சனி, 5 மார்ச், 2011

குடுத்து வச்சது அவ்ளோதான்..!!


இல்லம் (எனது படுக்கையறை): வழக்கத்துக்கும் மேல தேஜஸ் மின்னுவது போல இருக்கே...! நம்ம கண்ணே பட்டுடும் போல...! இன்னும் ஒரு பஹுடர் கோட்டிங் குடுத்துருவோமா...ம்ம்ம்ம்.....? வேணாம்...போதும், அப்புறம் அந்த கஸ்மாலத்துக்கு நம்மள அடையாளம் தெரியாம போனாலும் போய்டும்...! ஏற்கனவே, எக்கச்சக்க காம்பெடிஷன்ல ஓடிட்ருக்கு....!  

இதுவே போதும், புதுக் கண்ணாடியா இருந்தா இன்னும் கொஞ்ச கலரா தெரிவோம்...! இந்த பெர்சனாலிட்டிய புடிக்கிலன்னு எவளாவது சொல்ல முடியுமா என்ன...?  இன்னைக்கு எப்படியும் அமுக்கி போட்டுடனும் அவள...! சரி கெளம்புவோம், டைம் ஆயிட்ச்சு.....!

முக்குச் சந்து போகும் வழியில்:  ம்ம்ம்ம்...! இவள சந்திச்சி இதோட ஐஞ்சு வருஷம் ஓடிப் போச்சு...! எதிர்காலத்த நெனச்சா என்னாவுமோ, ஏதாவுமோன்னு ரொம்ப பயமா இருக்குது.  இந்தப் புள்ளைய முதல் முதல்ல பாத்ததுமே புடிச்சிபோச்சு....!  ஆப்பீஸ்ல ஒரு பார்ட்டி சமயத்துல,  "ஐயா" படத்துல வர்ற 'ஒரு வார்த்த சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்'ன்ற பாட்டுக்கு இவ ஆடுனதப் பாத்து அன்னைக்கு 'ஆப்' ஆனவன்தான்...! இன்னும் 'ஆன்' ஆகவே இல்ல...!

லூசுப் பெண்ணே....லூசுப் பெண்ணே....லூசுப் பெண்ணே.....!

வந்துட்டானா...? நமக்கு முன்னாலயே வந்து பட்டரைய போட்ருவானே..! நாயா அலையுறான் நாயி...நாக்க தொங்கப்போட்டுகிட்டு...! அதான் போடா பேப்பயலே'ன்னு காறித் துப்பிட்டாளே...! இன்னும் ஏன் மான, ரோஷம் இல்லாம பின்னாலயே சுத்துது இந்த மூதேவி...!  இவன்லாம் நம்ம லவ்வுக்கு ஒரு காம்ப்பெடிடர்...கருமம்..கருமம்...!  

பெரிய மம்முத 'மா'னான்னு நெனப்பு...! ரிங் டோனப் பாரு, லூசுப் பெண்ணே..வாம். அவதான் உன்ன கரடிப் பெத்த கொரங்கு,  லூசுன்னுட்டு போயிட்டாளே...அப்புறம் என்ன இன்னும் 
"லூசுப் பெண்ணே.....லூசுப் பெண்ணே.....லூசுப் பெண்ணே.....!"

டேய்...மண்ட வீங்கி!, அப்படியே சுவத்துல மூச்சா போற மாரி அந்தப் பக்கமா திரும்பி நின்னுக்கோ...இல்ல மூஞ்சில காறி துப்பிட்டு போய்டுவா என் வெள்ளைக்குட்டி...!  

முக்குச் சந்து:  அதே முக்கு சந்து...! கால் கடுக்க என்னோட தேவதைக்காக நான் நெதம் நிக்கிற அதே முக்கு சந்து. என்ன இன்னும் இந்தப் புள்ளைய காணோம்....?!!  எவ்வளவு நாள் தான் இப்படியே காலம் தள்ளுறதுன்னு தெரியில...! ஏற்கனவே இந்தப் புள்ள அந்தப் மண்ட வீங்கிப் பயலோட சுத்திகிட்ருந்தா'ன்னு ஊரே சிரிப்பா சிரிச்சுது...!  "சீ..சீ..., இது பழமா இருந்தாத்தானே புளிக்கிறதுக்கு, பச்ச காய்..", அப்படீன்னு தூர போட்டுடலாம்னு நெனெச்சேன். இப்போ என்னடான்னா, அவளுக்கும் அந்த மம்முத 'மா'னாவுக்கும் இடையில் பெரிய டமால்'னும், உறவு பனால்'னு அந்து நஞ்சிடிச்சின்னும் சொல்றாங்க...!   அத கேள்விப் பட்டுதான் சரி, போனாப் போவுது,  கழுதைய மன்னிச்சி வாழ்க்கை பிச்சை போடலாம்னு நிக்கிறேன்..!  இன்னும் காணல இந்த குடுத்து வச்ச சிறுக்கிய...ம்ம்ம்...!

வந்துட்டா...! வந்துட்டா...! 
வரா..வரா...கிட்ட வரா...!

லூசுப் பெண்ணே.....லூசுப் பெண்ணே.....லூசுப் பெண்ணே....!

அவனைத் தாண்டும் போது கரெக்டா சிச்சுவேஷன் சாங் போடறான் பாரு பன்னாட...!   டேய் மண்ட வீங்கி....!, என் லவ் கன்பார்ம் ஆவட்டும், உனக்கு அப்புறம் இருக்குடா கச்சேரி...! 

இவன் யார்ரா.. நடுவுல...?

தாடிக்காரன்... அதுவும் சைக்கிள்ல...! 

இந்தப் புள்ள என்ன பல்ல காட்றா அந்த தாடிக்காரனுக்கு, ஒரு வேளை அண்ணனா இருப்பானோ...? சீ...சீ..அதுக்குன்னு இவ்வளவு அசிங்கமாவா ஒரு அண்ணன் இருப்பான் அவளுக்கு...! அண்ணன் இல்லன்னா...ஒரு வேளை...

ஐயையோ...கருமம் என்ன இந்த புள்ள அவன கட்டிப் புடிக்குது...!  கொரங்கு கையிலர்ந்து பூமால கரடி கைக்கு போயிடிச்சா...? 

அடக்கடவுளே..!  இந்த கஸ்மாலம் என்ன அவன் சைக்கிள்ள உக்கார்றா?   கரடிபபயலுக்குத் தானா இந்த பழம் கெடைக்கணும்...அவன் ஏற்கனவே ரெண்டு குட்டி போட்டவன் மாரி இருக்கானே..?   ம்ம்ம்ம்.. வயிறு எரியுது...!  எங்க இருந்தாலும் நல்லா இருங்கடா...! சின்ன கேப்பு கெடைக்க கூடாதுடா உங்களுக்கு...!  இது தான் சைக்கிள் கேப்புல ஆட்டயப் போட்ருதோ...? கண்ணிமைக்கிற நேரத்துல கடலை மிட்டாய கவ்விட்டு கெளம்பிடிச்சே இந்த காட்டுப்பூன.......!

லூசுப் பெண்ணே.....லூசுப் பெண்ணே.....லூசுப் பெண்ணே....! மண்ட வீங்கியோட ரிங் டோன் சத்தம். 

இன்னுமாடா...! இவன......இருடா வரேன்...!

என்ன பாஸ்...! சோகமா...?!  அழுகாச்சி சீனெல்லாம் நமக்கு சரியா வராது, விடுங்க பாஸ்...!  பழம் நழுவி பால்டாயில்ல விழுந்துச்சுன்னு நெனச்சிக்க வேண்டியது தான்...! நமக்கென்ன போச்சு, குடுத்து வச்சது அவ்வளவுதான்...!

யாரு குடுத்து வச்சது...? 

ஒன்னுமே தெரியாத மாரித் தான் கேப்பீங்க, சிம்பு....!


அவதான்.... அட அவ தாங்க...., நயன் தாரா...!!   அவ குடுத்து வச்சது அவ்ளோதான்...!

என்னைய விடுங்க...! உங்க நெலமதான் ரொம்ப பரிதாபம்...! தாடி வச்சவனுங்க தான் உங்களுக்கு பெரிய இம்சையா இருப்பானுவ போலிருக்கு...!

எப்படி சொல்றீங்க..?

மறுபடியும் ஒன்னுமே தெரியாத மாதிரி கேக்குறீங்களே...! சரி, போவுது, கொஞ்சம் கீழப் பாருங்க...


நான் சொன்னது சரி தானே...!!

மறுபடியும் இல்லம் (எனது படுக்கையறை):
"குன்XXX'ல வெய்யில் அடிக்கிற வரைக்கும் தூங்கினா...!"

"குன்XXX'ல வெய்யில் அடிக்கிற வரைக்கும் தூங்கினா...!"

"குன்XXX'ல வெய்யில் அடிக்கிற வரைக்கும் தூங்கினா...!" 

 அட எழுந்துட்டேன், அந்த டி.வி.'ய  நிறுத்தித் தொலடா டேய் ...! உன்னோட தெனம் இது ஒரு எழவாப் போச்சு...!!

"அண்ணே...! படம்'ண்ணே "7/G. ரெயின்போ காலனி" அதுல ஹீரோ'வ அவுங்க அப்பா திட்ற சீன் அண்ணே...!  தூக்கம் கலைஞ்சிப் போச்சா..? நீ தூங்கு, மணி இப்போதான் பகல் பன்னிரண்டு...!

அத விடுங்க, இன்னைக்கு யாருண்ணே கனவுல...?" ரோஷினியா, ஜோதிகாவா...?  

டேய் போடா..போய் தம்பியா..லட்சணமா.. அண்ணனுக்கு ஹார்லிக்ஸ் கொண்டு வாடா....! காலங் காத்தால, தொன தொனன்னு பழைய கெழவிங்கள பத்தி கேட்டுகிட்டு இருக்க...!

கெழவிங்களா.....? அப்ப தமன்னாவா...இல்ல நயன் தாராவா...??!!

போயிர்ரா...! நானே லவ் பெய்லியர் துக்கத்துல இருக்கேன்...!


என்னாது...கனவுல கூட லவ் பெய்லியரா...??

கரர்ர்ர்ர்....தூ........! கரர்ர்ர்ர்....தூ........!

டேய்,  ஒரு பெயிலியருக்கு ஏன்டா ரெண்டு தடவ துப்புற...! இன்டீசன்ட் பெல்லோ...!

                                            ---கனவு கலைந்தது--- நண்பர்களே...!, 
கனவுகளும் நிஜத்தை போல்தான் என்றாலும், சில கனவுகள், நிஜத்தையும் தாண்டியவைகளா இருக்கும். அதுல ஒரு வசதி "ஒபாமவக்" கூட நான் ஓங்கி ஒரு அறை விடலாம். "ஒசாமாவக்" கூட அர்ரெஸ்ட் பண்ணலாம். சரி..., அந்த கனவுகளை எல்லாம் தொகுப்போமே..அப்படீன்னு தோனுச்சு...! அது தான் இந்தப் பதிவு...! நான் இனிமேலும் கனவு காணலாமா..., இல்ல உங்க தர்மடியிலிருந்து தப்பிச்சு ஓடிவிடலாமா என்பது கிடைக்கும் வரவேற்பையும், காறி துப்புகளையும் பொறுத்ததே....,!!

(படம் தந்த கூகுள்க்கு நன்றி...!!)
--விளையாடும் வெண்ணிலா....

17 கருத்துகள்:

வேடந்தாங்கல் - கருன் சொன்னது…

Nice.,

ஆனந்தி.. சொன்னது…

ஹேய்..நியூ போஸ்ட்...இதோ வரேன்....:))

ஆனந்தி.. சொன்னது…

அட சதீஷ் ட்ட இருந்து இவளவு ஜாலி பதிவா?? :-)) ம்ம்....அந்த கலோக்கியல் பேட்டை பாஷை சரளமா வருதே...ஹீ...ஹீ...தமிழனாய் பிறந்து இது கூட இல்லாட்டி...

பதிவை பற்றி....
இதுவும் வித்யாசமாய் இருந்தது சதீஷ்...நல்லா சிரிச்சேன்...எங்க குடும்பமே அனுஷ்கா தான் பா...:-)) நயன்தாராவை ஆதவன் படம் பார்த்து பயந்து போனவங்க தான்....:-))))

Sathish Kumar சொன்னது…

//வேடந்தாங்கல் - கருன் சொன்னது…
Nice.,//

நன்றி கருண்..!

Sathish Kumar சொன்னது…

ஆனந்தி.. சொன்னது…
//அட சதீஷ் ட்ட இருந்து இவளவு ஜாலி பதிவா?? :-)) //

ஹீ....ஹீ....! ரொம்ப நன்றிங்க....!! பொதுவாவே நாம ஜாலியான பார்ட்டி தாங்க..! நாட்டு நடப்புத்தான் நம்ம சீரியாசாக்கிடுது..!!

Sathish Kumar சொன்னது…

//ஆனந்தி.. சொன்னது…
பதிவை பற்றி....
இதுவும் வித்யாசமாய் இருந்தது சதீஷ்...நல்லா சிரிச்சேன்...:-))))//

கனவுகளும் நிஜத்தை போலத்தான் என்றாலும், சில கனவுகள், நிஜத்தையும் தாண்டியவைகளா இருக்கும். அதுல ஒரு வசதி "ஒபாமவக்" கூட நான் ஓங்கி ஒரு அறை விடலாம். "ஒசாமாவக்" கூட அர்ரெஸ்ட் பண்ணலாம். சரி, அந்த கனவுகளை எல்லாம் தொகுப்போமே..அப்படீன்னு தோனுச்சு...!

எனக்கு உள்ளூர பயம் இருந்ததுங்க. "என்னையா...!, இப்படி கிறுக்கி வச்சிருக்க", அப்படீன்னு கேட்ருவீங்களோன்னு...!

Sathish Kumar சொன்னது…

//ஆனந்தி.. சொன்னது…
எங்க குடும்பமே அனுஷ்கா தான் பா...:-)) நயன்தாராவை ஆதவன் படம் பார்த்து பயந்து போனவங்க தான்....:-))))//


குடும்பமேவா..! சூப்பர்..! என்ன இருந்தாலும் கேரள சேச்சி மாறி வருமா...! அப்புறம், இந்த ரோஷினி யாருன்னு கேக்கவே இல்லையே...? அவுங்க தான் "குணா" படத்து ஹீரோயினி...! அப்பவே ஜொள்ளு அவங்களப் பாத்து...! ஹீ....ஹீ....!

ஆனந்தி.. சொன்னது…

//கனவுகளும் நிஜத்தை போலத்தான் என்றாலும், சில கனவுகள், நிஜத்தையும் தாண்டியவைகளா இருக்கும். அதுல ஒரு வசதி "ஒபாமவக்" கூட நான் ஓங்கி ஒரு அறை விடலாம். "ஒசாமாவக்" கூட அர்ரெஸ்ட் பண்ணலாம். சரி, அந்த கனவுகளை எல்லாம் தொகுப்போமே..அப்படீன்னு தோனுச்சு...!

எனக்கு உள்ளூர பயம் இருந்ததுங்க. "என்னையா...!, இப்படி கிறுக்கி வச்சிருக்க", அப்படீன்னு கேட்ருவீங்களோன்னு...! //

ஹ ஹ...அப்படி எல்லாம் கேட்கவே மாட்டேன் சதீஷ்...எழுத்துக்களில் இந்த ஸ்டைல் தான் இருக்கணும்னு கட்டுப்பாடு இல்லாமல் இருக்கணும்...நான் ஸ்டைல் ஆ தான் சொன்னேன்...:-)) எழுத்துக்களில் உங்களின் டைனமிக்ஸ் ரசிக்கிறேன் சகோ...

செம கலோக்கியலா பேட்டை ராப் பாணியில் நொறுக்கிட்டிங்க:-))

ஓ..குணா ரோஷினியா..அழகு தேவதை ல அந்த பொண்ணு...எனக்கும் பிடிக்கும்...:)))

அடுத்த கனவில் முதல்வர் ஆகுரமதிரி கனவு காணுங்க...அதை பதிவாய் போடுங்க...ஹ ஹ....இல்லாட்டி...இந்தியா ஜெயிச்சு கப் வாங்குரமாதிரியாவது கனவு காணுங்க...இதை கட்டயமா விடிகாலையில் கனவு காணுங்க சதீஷ்...(அப்போ தான் பலிக்குமாம்...) :-))
--
Ananthi..

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அண்ணே...! படம்'ண்ணே "7/G. ரெயின்போ காலனி" அதுல ஹீரோ'வ அவுங்க அப்பா திட்ற சீன் அண்ணே...!//
hahaa

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

எழுத்துக்களில் உங்களின் டைனமிக்ஸ் ரசிக்கிறேன் சகோ...
//
நானும்

Sathish Kumar சொன்னது…

ஆனந்தி.. சொன்னது…
//இந்தியா ஜெயிச்சு கப் வாங்குரமாதிரியாவது கனவு காணுங்க...இதை கட்டயமா விடிகாலையில் கனவு காணுங்க சதீஷ்...(அப்போ தான் பலிக்குமாம்...) :-))//

ஐயோ..! ஆளை விடுங்க சாமி...! கனவுலயும் கிரிக்கெட் இம்சையா...?!! ஹீ....ஹீ....!

Sathish Kumar சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…
எழுத்துக்களில் உங்களின் டைனமிக்ஸ் ரசிக்கிறேன் சகோ...

நானும்//

வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி தோழரே...! சதீஷ் குமார் டு சதீஷ் குமார்...! :-))

ஆனந்தி.. சொன்னது…

என்ன சகோ..ப்ரோபைல் படம் பட்டைய கிளப்புது...எதுவும் விஜயகாந்த் படம் லேட்டஸ்ட் ஆ பார்த்திங்களா...(ஹேய்..நான் கண்டுபிடிச்சிட்டேனே ஜே.கே.ரித்தீஷ் படம் பார்த்து இருக்கீங்க...ஹ ஹ) சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்..நல்ல இருக்கு சதீஷ் இந்த படம்...செம தோரணையா இருக்கு...இதையே follow பண்ணுங்க...

Sathish Kumar சொன்னது…

//ஆனந்தி.. சொன்னது…
ஹேய்..நான் கண்டுபிடிச்சிட்டேனே ஜே.கே.ரித்தீஷ் படம் பார்த்து இருக்கீங்க...ஹ ஹ) சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்..//

அதாவது....சொல்றதெல்லாம் சொல்லிட்டு சும்மாதான் சொன்னேன்னு கடைசியா மாத்திட்றது...! இது எப்படி இருக்குன்னா.... கப்பிகல்லால கபாலத்த திறந்துட்டு, ரத்தம் வருதான்னு கேக்ற மாதிரி இருக்கு..! ம்ம்ம்.....பாத்துக்கறேன்...!

Sathish Kumar சொன்னது…

@ஆனந்தி..
இங்க மைனஸ் 18 டிகிரி’ல இந்த மாதிரி பெர்பெக்டா இன்சுலேஷன் பண்ணாம இருந்தா, வெந்த சோறு வெய்யில்லா காஞ்சி வெரைச்ச மாரித்தான் கெடக்கணும் மேடம்..! ஒரே எக்ஸ்ட்ரா பிட்டிங்கு அந்த கண்ணடிதானுங்க...! இங்க இப்படி இருக்கிறது தப்பில்ல..., அங்க அந்த காட்டு வெய்யில்ல, நம்ம “பூச்சி கலிஞரும்", “ரித்தீஷ் அங்கிளும்” அப்படி அலையறங்கலே, அது தாங்கோ காமிடின்னாலும் காமிடி....! அதா கேக்க மாட்ரீங்கோ....? சின்னப் பையன புட்ச்சாந்து 'ராகிங்' பண்ண வேண்டியது....! ஹீ.....ஹீ.....ஹீ....!!

Sathish Kumar சொன்னது…

//ஆனந்தி.. சொன்னது…
செம தோரணையா இருக்கு...இதையே follow பண்ணுங்க...//

சூப்பருங்கோ....!!

(உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்றேன், யார்ட்டையும் சொலிடாதீங்க.....!! சில பேர் நான்(Sathish) வருங்கால முதல்வரா ஆயிடுவேன்னு சொல்றாங்க..!! எப்டீங்க்ரீங்களா...? சினிமால சூப்பர் ஸ்டார் ஆகித்தான்...! No…no.. பிடாது.....பிடாது.....இங்க பிடாதுங்க்றேன்.....! போயி ரூம் போட்டு சிரிங்க.....! ஹ.....ஹ.....!)

ஆனந்தி.. சொன்னது…

//(உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்றேன், யார்ட்டையும் சொலிடாதீங்க.....!! சில பேர் நான்(Sathish) வருங்கால முதல்வரா ஆயிடுவேன்னு சொல்றாங்க..!! எப்டீங்க்ரீங்களா...? சினிமால சூப்பர் ஸ்டார் ஆகித்தான்...! No…no.. பிடாது.....பிடாது.....இங்க பிடாதுங்க்றேன்.....! போயி ரூம் போட்டு சிரிங்க.....! ஹ.....ஹ.....!)///

ரூம் போட்டு சிரிக்கவா...மக்கா...நெஞ்சு வலிக்குது இத படிச்சு..ஹாஸ்பிடல் ஓடிட்டு இருக்கேன்....:)))

கருத்துரையிடுக